Home இந்தியா வடிவேலு கனவு பலிக்காது – நடிகர் சிங்கமுத்து சாபம்

வடிவேலு கனவு பலிக்காது – நடிகர் சிங்கமுத்து சாபம்

570
0
SHARE
Ad

singamuthu-vadiveluசென்னை, பிப் 24 – நடிகர் வடிவேலு காரிய கிறுக்கன். அ.தி.மு.க.,வில் சேர துடிக்கிறார்,” என, நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார். தினமலர்  நாளிதழுக்கு, சிரிப்பு நடிகர் சிங்கமுத்து அளித்த சிறப்பு பேட்டியில், அ.தி.மு.க.,விற்காக, சட்டசபை தேர்தலின் போது, பிரசாரம் செய்தேன். இப்போதும், அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறேன்.

அதை, தினசரி எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். அ.தி.மு.க.,வில் நான் உறுப்பினராக இருப்பதற்கு, கொடுத்து வைத்திருக்க வேண்டும். சாதனை கட்சியில் பணியாற்றும் நான், எப்படி வருத்தப்படுவேன்.

அ.தி.மு.க.,வில் இருப்பதால், சினிமா தயாரிப்பாளர்கள், அச்சத்தில் பட வாய்ப்பு கொடுக்க மறுத்ததாக பேசப்படுகிறதே?

#TamilSchoolmychoice

அ.தி.மு.க.,விற்கு பிரசாரம் செய்ததால், இப்போது, பொதுக்கூட்டங்களில் பேசுவதால், படங்கள் கிடைக்கவில்லை என, யார் சொன்னது.கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், நான் நடித்த, பட்டத்து யானை, ராஜா ராணி, தேசிங்கு ராஜா படங்கள் வெளிவந்துவிட்டன.

“விடமாட்டேன், கம்பன் கழகம், பருதி, நாடோடிவம்சம், பகடை பகடை, காதல் பஞ்சாயத்து, நீயெல்லாம் நல்லா வருவேடா, ஆனந்தமழை, முதல் மழை, காதல் பிரவேசம்’ உட்பட, 22 படங்களில், தற்போது நடித்து வருகிறேன்.

அ.தி.மு.க.,வில், நான் இருப்பதால், படத் தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லை. அவர்களும் என்னால் பிரச்னை வரும் என, நினைப்பதில்லை. அ.தி.மு.க.,வினர் யாரும், திரைப்படத் துறையினரை அச்சுறுத்துவதோ, மிரட்டுவதோ கிடையாது.

தி.மு.க.,விற்கு வடிவேலு பிரசாரம் செய்தது பற்றி?
“அ.தி.மு.க., ஆட்சி, தமிழகத்தில் மலரக் கூடாது’ என்பதற்காக, கடந்த சட்ட சபை தேர்தலின் போது, வரிந்து கட்டிக் கொண்டு வம்படியாக பிரசாரம் செய்தார் வடிவேலு. தன் பிரசாரத்தால், தி.மு.க., வெற்றிபெறும் என, வடிவேலு கனவு கண்டார்.

தி.மு.க.,வை குழிதோண்டி புதைக்கத்தான், வடிவேலு பிரசாரம் செய்கிறார் என்பது, அப்போது, தி.மு.க.,வினருக்கும், தலைவர்களுக்கும் தெரியாமல் போனது. அது, தி.மு.க.,வின் விதி; துரதிருஷ்டம். அதனால் அவர் கனவு பலிக்காது; இனி, தேறவும் மாட்டார்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இருந்த விஜயகாந்த், இப்போது இல்லை. வரும் லோக்சபா தேர்தலில், விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா? கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் விஜயகாந்த் இருந்ததால், கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு, பாராட்டி பேசினேன்.

அது காலத்தின் கட்டாயம். வரும் தேர்தலில், விஜயகாந்த் எதற்கோ ஆசைப்பட்டு, ஏதோ கட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டு, அ.தி.மு.க., ஆட்சி குறித்து, முன்னுக்கு பின் முரணாக பேசினால், நான் அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டன் என்ற முறையில், சரியான பதிலடி கொடுப்பேன்.

வடிவேலுவும், நீங்களும் மீண்டும் இணைந்து விட்டதாக பேசப்படுகிறதே?

நான் வடிவேலு உடன், சமாதானமாகி விட்டதாக, அவரே தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம், செய்தி பரப்புகிறார். வடிவேலு தற்போது, நடித்துக் கொண்டிருக்கும், “தெனாலிராமன்’ படத்திற்கு, .தி.மு.க.,வினரால், பிரச்னை ஏற்பட்டு விடுமோ, தடை ஏற்படுத்தி விடுவார்களோ என, நினைத்து, அ.தி.மு.க.,வை சார்ந்து உள்ளது போல, பேசிக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க.,வில் சேர, வடிவேலு விரும்புவதாகவும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பேசப்படுகிறதே?

உண்மை தான். வடிவேலு ஒரு காரிய கிறுக்கன், அவருக்கு வருவாய் கிடைக்கிறது என்றால், யாரிடமும் எப்படி வேண்டுமானாலும் நடித்து, காரியம் சாதித்துக் கொள்வார். இந்த நினைப்பில் தான், அ.தி.மு.க.,வில் சேர துடிக்கிறார். அவர், அ.தி.மு.க.,வில் சேர்ந்து என்னத்தை கிழிக்க போகிறார்.

சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை, வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்ததை, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

விஜயகாந்துக்கும், வடிவேலுக்கும் தனிப்பட்ட முறையில் தகராறு இருந்தது. தனியாக விஜயகாந்தை எதிர்க்க முடியாது என, நினைத்த வடிவேலு, அப்போது நடந்த சட்டசபை தேர்தலை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். விஜயகாந்தை எதிர்க்கவே, தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்தார். அரசியல் கட்சி மேடைகளில், விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசினார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், தனக்கு, எம்.பி., “சீட்’ கேட்கவும் வடிவேலு திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. வடிவேலு, அ.தி.மு.க.,வை பற்றி பேசியதற்கு, நான் பல இடங்களில் பதிலடி கொடுத்து, பேசி விட்டேன் என நடிகர் சிங்கமுத்து கூறினார்.