Home Featured கலையுலகம் விஜயகாந்த் கிண்டலடித்து சிங்கமுத்து நகைச்சுவை மிமிக்ரி! (கணொளியுடன்)

விஜயகாந்த் கிண்டலடித்து சிங்கமுத்து நகைச்சுவை மிமிக்ரி! (கணொளியுடன்)

696
0
SHARE
Ad

maxresdefaultசென்னை – விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று மிமிக்ரி செய்து கிண்டலடித்துள்ளார் அதிமுக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து.

விஜயகாந்த் பேசும் பேச்சு, அவருக்கு மட்டுமே புரிந்த பாஷை… எங்கேயோ ஆரம்பித்து… எதற்கோ கொண்டுபோய், எதையோ மெதுவாக பேசி முடிப்பார்.

இப்படித்தான் காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய போது, பழைய சோறு, பச்சை வெங்காயத்தில் ஆரம்பித்து புதிய தலைமுறையின் கிச்சன் கேபினட்டை கிண்டலடித்தார் விஜயகாந்த்.

#TamilSchoolmychoice

சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், விஜயகாந்தின் மேடை பேச்சையும், கூட்டணி பேச்சையும் கிண்டடித்துள்ளார் அதிமுக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து.

விஜயகாந்த் பேசுவது மக்களுக்கு புரியணுமே அப்புறம்தானே அவர் முதல்வராகணுமா? வேண்டாமா? என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று கேட்கும் சிங்கமுத்து, விஜயகாந்தின் பேச்சை மிமிக்ரி செய்துள்ளார்.

நடிகர் சிங்கமுத்து செய்த மிமிக்ரியை கீழே காணலாம்: