Home Kajang by-Election ‘அம்னோ தலைவர்’ போல் பேச வேண்டாம் – லியாவிற்கு அன்வார் எச்சரிக்கை

‘அம்னோ தலைவர்’ போல் பேச வேண்டாம் – லியாவிற்கு அன்வார் எச்சரிக்கை

535
0
SHARE
Ad

anwar-ibrahimகோலாலம்பூர், பிப் 24 – ‘ஓப்ஸ் லாலாங்’ விவகாரம் குறித்து கருத்து கூறும் மசீச தலைவர் லியாவ் தியாங் லாய் ‘அம்னோ தலைவர்’ போல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

லியாவ் குறித்து தான் எந்த ஒரு கருத்தும் இதுவரை கூறாத நிலையில், தன்னை பற்றி லியாவ் அவதூறாகக் கூறுவது வருத்தமளிக்கிறது என்றும் அன்வார் தெரிவித்தார்.

“மகாதீரை காரணம் கூறும் அளவிற்கு லியாவிற்கு துணிச்சல் இல்லை. அதனால் தான் என்னை அவர் தாக்கி பேசுகிறார்” என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

லியாவ் நல்ல முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதைவிடுத்து அம்னோ தலைவர் போல் பேசக்கூடாது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள காஜாங் இடைத்தேர்தலில், அன்வாரை எதிர்த்து மசீச உதவித் தலைவர் சியூ மெய் பன் போட்டியிடுகிறார்.

கடந்த வாரம் லியாவ் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ‘ஓப்ஸ் லாலாங்’ புரட்சிக்கு அன்வார் இப்ராகிம் தான் காரணம் என்று தெரிவித்தார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு, இன புரட்சி ஏற்பட்டு மலேசிய காவல்துறை ‘ஓப்ஸ் லாலா’ நடவடிக்கையின் படி, 106 பேரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.