கோலாலம்பூர், பிப் 24 – பக்காத்தான் ஆதரவு வலைத்தளங்கள் முடக்கம் செய்யப்பட்டது குறித்து அமைச்சுக்கு தெரியாது என துணை தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் ஜைலானி ஜோஹாரி கூறியுள்ளார்.
அமைச்சரவை எப்போதும் அனைவருக்கும் பொதுவாகவே நடந்து கொள்வதாகவும், மக்களின் புகார்களின் அடிப்படையில் சில இணையப் பக்கங்கள் தணிக்கை செய்யப்படுவதாகவும் ஜைலானி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பக்காத்தான் ஆதரவு பேஸ்புக் வலைத்தளமான ‘We Fully Support Pakatan (DAP)’ முடக்கப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருந்த அந்த பேஸ்புக் பக்கத்தை நேற்று முதல் மலேசியாவில் பார்வையிட முடியவில்லை என்று பக்காத்தான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தல் காரணமாக தான் இந்த பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக பக்காத்தான் ஆதரவாளர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.