சென்னை, பிப் 24 – தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 13%ல் இருந்து 4.2% ஆக குறைந்துள்ளது. அதிமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் தொழில் வளர்ச்சியும் சரிந்துள்ளது. தொழில் வளர்ச்சி 9.1%ல் இருந்து 1.3% ஆக குறைந்துள்ளது என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் புகார் கூறிள்ளார். தமிழகத்தில் வேளாண் வளர்ச்சியும் 1.98%ல் இருந்து 0.12% ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு மது போதை தான் காரணம் என்றும் அன்புமணி கூறிள்ளார்.
ரூ.23,000 கோடி மதுக்கடை வருவாயில் தான் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்வெட்டை சரிசெய்யாத ஜெயலலிதா பிரதமராக பகல் கனவு காண்பது வேடிக்கை என்றும் கூறிள்ளார்.