சென்னை: பிப் 24 – இன்று தமிழகம் எங்கும் அதிமுகவினரால் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிட பேசிய ஜெயலலிதா, “அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோளைஅடிப்படையாக வைத்து இத்தேர்தலை சந்திப்போம். 40 தொகுதிகளுக்கும் அதிமுகவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் மட்டும் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பின், அத்தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
ஒரே கட்டமாக அனைத்து வேட்பளார்களையும் அதிமுக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு, வேட்பாளர்கள் முன்கூட்டியே வாக்காளர்களைச் சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் இந்த வியூகம் வழிவகுக்கும்.
அதிமுக வெளியிட்டுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல்:
- திருவள்ளூர் (தனி)- பி.வேணுகோபால்
- தென் சென்னை- ஜெயவர்த்தன்
- மத்திய சென்னை- விஜகுமார்
- வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்
- விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன்
- ஸ்ரீபெரும்புதூர்- ராமச்சந்திரன்
- பெரம்பலூர்- மருதை ராஜன்
- திருச்சி- ப.குமார்
- வேலூர் – செங்குட்டுவன்
- சேலம்- வி.பன்னீர்செல்வம்
- சிதம்பரம் (தனி)- சந்திரகாசி
- மயிலாடுதுறை- பாரதி மோகன்
- நாகப்பட்டினம் (தனி)- கோபால்
- காஞ்சிபுரம்(தனி)- மரகதம் குமரவேல்
- கடலூர்- அருண்மொழி தேவன்
- மதுரை- கோபாலகிருஷ்ணன்
- தேனி- பார்த்திபன்
- தர்மபுரி- மோகன்
- விருதுநகர்- ராதாகிருஷ்ணன்
- ராமநாதபுரம்- அன்வர்ராஜா
- அரக்கோணம்- கோ.அரி
- கிருஷ்ணகிரி- அசோக்குமார்
- திருவண்ணாமலை- வனரோஜா
- ஆரணி- ஏழுமலை
- கள்ளக்குறிச்சி- காமராஜ்
- திருப்பூர்- சத்யபாமா
- கோவை- நாகராஜன்
- நீலகிரி (தனி) – கோபாலகிருஷ்ணன்
- நாமக்கல்- சுந்தரம்
- ரோடு- செல்வகுமார் சின்னையன்
- பொள்ளாச்சி- மகேந்திரன்
- திண்டுக்கல்- உதயகுமார்
- கரூர்- தம்பிதுரை
- தஞ்சை- பரசுராமன்
- சிவகங்கை- செந்தில்நாதன்
- தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி
- தென்காசி (தனி)- வி.சாந்தி முருகேசன்
- திருநெல்வேலி- பிரபாகரன்
- கன்னியாகுமரி- ஜான் தங்கம்
- புதுச்சேரி- எம்.வி.ஓமலிங்கம்