கோலாலம்பூர், பிப் 25 – மலேசியாவின் முதன்மையான குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, சுமார் 5 லட்சம் இருக்கைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது.
இந்த முற்றிலும் இலவச சேவைக்கு தற்போது தொடங்கி மார்ச் 2 ஆம் தேதி வரை செய்யப்படும் முன்பதிவு செய்யலாம். இவ்வருடம் அக்டோபர் 1 ஆம் முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி வரையில் பயணம் செய்யலாம் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது.
இதுதவிர 1.8 மில்லியன் குறைந்த கட்டண இருக்கைகளையும் ஏர் ஏசியாவின் குறிப்பிட்ட பயணங்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த டிக்கெட்டுகளை www.airasia.com என்ற அகப்பக்கத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஐபோன், ஆண்டிராய்டு, பிளாக் பெர்ரி Z 10 போன்ற செல்பேசிகளின் வாயிலாக ஏர் ஏசியா செயலிக்கு சென்றும் முன்பதிவு செய்யலாம்.
அத்துடன், அலோ செடார், ஜோகூர் பாரு, கோத்தா பாரு, லங்காவி, பினாங்கு, கூச்சிங், மிரி மற்றும் சிபு ஆகிய உள்ளூர் பயணங்களுக்கும், சிங்கப்பூர், ஜகார்த்தா, பண்டுங், மேடான், பாலி, பேங்காக், ஹாட் யாய், ஹோ சின் மின் சிட்டி போன்ற மாநகரங்களுக்கும் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஏர் ஏசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.