Home இந்தியா எங்களுக்கு இந்தக் கூட்டணியே போதும்-ஜெயலலிதா!

எங்களுக்கு இந்தக் கூட்டணியே போதும்-ஜெயலலிதா!

456
0
SHARE
Ad

Jayalalithaa_Re7839சென்னை,  பிப் 25 – 40 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்துப் பிரசாரம் செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் செய்வேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அங்கு மட்டுமே பிரசாரம் செய்வேன். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளும் பாடுபடும்.

#TamilSchoolmychoice

எங்களுக்கு இந்தக் கூட்டணி போதும். கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளோம். பாஜக, காங்கிரஸ் போன்றவை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்வது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. அவர்களிட்தான் கேட்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.