Home உலகம் சிறிய இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா விளக்கம்

சிறிய இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா விளக்கம்

533
0
SHARE
Ad

Narendra-Modiபீஜிங், பிப் 25 – அண்டை நாடுகளின், ஒரு அங்குல நிலத்தைக் கூட, அபகரிக்க நினைக்கவில்லை’ என, சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில், கடந்த வாரம், நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய, கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, அருணாசல பிரதேச எல்லையை, சீனப் படைகள், ஆக்கிரமிப்பு செய்வதை எச்சரித்தார்.

நாட்டின் எல்லையை விஸ்தரிக்கும் எண்ணத்தை, சீனா கைவிட வேண்டும். இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை, எந்த சக்தியாலும் பறிக்க முடியாது’ என, அவர் பேசினார். மோடியின் இந்த குற்றச்சாட்டை, சீனா மறுத்துள்ளது.

இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக பெண் அதிகாரி, ஹூவா சுன்யிங் கூறியதாவது, சீனா இந்தியா எல்லையில், சமீப காலத்தில், எந்த வித ஆயுத தாக்குதல்களும் நடக்கவில்லை. இதன் மூலம் சீனா, அண்டை நாட்டுடன் அமைதியை விரும்புகிறது என்பதை காட்டுகிறது.

#TamilSchoolmychoice

நாங்கள், அண்டை நாடுகளின்  ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இரு நாட்டுக்கிடையே ஏற்படும் மோதல், ஆசிய பகுதி முழுமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, கடைசி வரை அமைதி போக்கை பின்பற்ற, சீனா விரும்புகிறது என சுன்யிங் கூறினார்.