Home தொழில் நுட்பம் வாட்ஸ்எப் சேவை தடங்கலுக்கு இணையத் தொடர்புதான் காரணம்!

வாட்ஸ்எப் சேவை தடங்கலுக்கு இணையத் தொடர்புதான் காரணம்!

647
0
SHARE
Ad

jan_netபிப்ரவரி 25 – கடந்த வாரம் சனிக்கிழமை வாட்ஸ் அப் செயலியில் ஏற்பட்ட பல மணி நேர தடங்கலுக்கு தங்களது இணையத்தொடர்பு  அமைப்பு திசைவி (Network router) தான் காரணம் என்று வாட்ஸ் அப் நிறுவனர் ஜான் கவும் (படம்) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடங்கல் ஏற்பட்டதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். இந்த வருடத்தில் இதுவே நீண்ட மற்றும் பெரிய தடங்கல்  ஆகும். சேவை வழங்குநருடன் இணைந்து இந்த சிக்கலை உடனடியாக தீர்ப்போம். இனி எதிர்காலத்தில் இது போன்ற தடங்கல் ஏற்படாத வகையில் சேவை வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு ஃபேஸ் புக் கையகப்படுத்திய மூன்றே நாட்களுக்குள், இந்த நீண்ட தடங்கல் நிகழ்ந்தது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

#TamilSchoolmychoice

கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 450 மில்லியன் பயனர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.