Home Featured தொழில் நுட்பம் “வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை”

“வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை”

1284
0
SHARE
Ad

(செல்லினம் குறுஞ் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை செல்லியலில் மீண்டும் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)  

வாட்சாப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களை தடிப்பாகவோ,  கோடிட்டோ, சாய்வாகவோ காட்டலாம்.  ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றது. ஆண்டிராய்டில் இன்னும் தேர்வு முறையிலேயே இருக்கின்றது.

whatsappஇந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றலாம்.

#TamilSchoolmychoice

அந்தக் குறியீடுகள் இதோ:

  • தடிப்பெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும். எ.கா.  *what* என்று எழுதினால் what என்று தடிப்பாகத் தோன்றும்.
  • சாய்வெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும். எ.கா. _how_ என்று எழுதினால் how என்று சாய்வாகத் தோன்றும்.
  • நடுக்கோடு : சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~sorry~please என்று எழுதினால், ‘sorry’ எனும் சொல் நீக்கப்பட்டு please என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : sorryplease

தமிழிலும் எழுத்துரு வித்தை

இந்த வித்தை ஆங்கிலத்தில் மட்டும் இல்லை. தமிழ்ச் சொற்களையும் அதே குறியீடுகளைக் கொண்டு உருமாற்றம் செய்யலாம். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு செய்தி இதோ:

Muthu Nedumaran-article-Whatsapp-RichText

வாட்சாப் செயலியில் எழுத்துரு மாற்றம்

எப்படி உணர்ச்சிக் குறிகள் (emojis) செய்திகளுக்கு உணர்ச்சிகளை ஊட்டுகின்றனவோ அதுபோல இந்தப் புதிய வசதியைக்கொண்டு செய்திகளை எழுதுவதில் பயனர்கள் பல புதுமைகளைக் கையாளப் போகிறார்கள் என்பது திண்ணம். அதில் தமிழும் தடையின்றி இடம்பெற செல்லினம் உதவப்போகிறது என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே!

-நன்றி: செல்லினம்