Home Featured கலையுலகம் லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

1127
0
SHARE
Ad

0சென்னை – நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள் ‘தெறி’ படம் பார்க்க ஆசைப்பட்டனராம்.

இதை நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் தெரிவித்த நடிகர் லாரன்ஸ், அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார்.  சென்னையின் ஏதாவது ஒரு தியைரங்கில் 60 டிக்கெட்டுகள் ஒதுக்கிக் கொடுப்பார் என லாரன்ஸ் எதிர்பார்த்தாராம். விஜய்யோ லாரன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது, லாரன்ஸ் இல்லத்தில் உள்ள 60 குழந்தைகளும் தனியாக அமர்ந்து ‘தெறி’ படத்தை பார்க்கும் வகையில் சென்னை ஏவிஎம் திரையரங்கில் பிரத்யேகமாக படம் காண்பிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் விஜய். அத்தனை குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தியதற்காக விஜய்க்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

#TamilSchoolmychoice