Home Kajang by-Election சியூ மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக இருப்பார் – மசீச

சியூ மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக இருப்பார் – மசீச

546
0
SHARE
Ad

chewmeifunபெட்டாலிங் ஜெயா, பிப் 26 – தேசிய முன்னணி வேட்பாளரான சியூ மெய் பன் (படம்) காஜாங்கில் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிக்கும், அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக உள்ளார் என்று மசீச துணைத் தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் கூறியுள்ளார்.

இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் துணையமைச்சராகவும் இருந்த சியூ மெய் பன், மக்களின் தேவைகளையும், அவர்களின் பிரச்சனைகளையும் முறையான வகையில் கையாள்வார் என்றும் வீ கா சியாங் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் காஜாங் மக்களின் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்றும் வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதற்கு உதவியாக சியூ மக்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையே ஓர் இணைப்பாக செயல்படுவார் என்றும் வீ கா சியாங் கருத்துத் தெரிவித்துள்ளார்.