Home கலை உலகம் மைக்ரோமேக்ஸ் தலைவருடன் காதல்-அசின்

மைக்ரோமேக்ஸ் தலைவருடன் காதல்-அசின்

686
0
SHARE
Ad

873716f8e278663f850536886cd47427_Lமும்பை, பிப் 26 – பாலிவுட்டிற்கு சென்ற அசின் தற்போது மைக்ரோமேக்ஸ் செல்பேசி நிறுவன தலைவர் ராகுல் ஷர்மாவை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. மும்பையில் தங்கி இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அசின்.

அவர் கடைசியாக நடித்த கிலாடி 786 படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து தற்போது தான் ஆல் இஸ் வெல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அசினுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. இந்நிலையில் அவர் தனக்கு பொருத்தமான, முக்கியத்துவம் உள்ள நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்து வருகிறார்.

அசினுக்கு வெளிநாட்டில் காதலன் இருப்பதாகவும், அதனால் தான் அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதாகவும் வடநாட்டு பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. அசினும், மைக்ரோமேக்ஸ் செல்பேசி நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவருக்கும் தற்போது நெருக்கமாகவுள்ளனர்.

#TamilSchoolmychoice

10 மாதங்களுக்கு முன்பு அசினும், ராகுலும் சந்தித்துக் கொண்டார்களாம். அதில் இருந்து அவர்களுக்கு இடையேயான நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம். அசின் தனது பிறந்தநாளையொட்டி தனக்கு நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் சிறப்பு விருந்தினராக மைக்ரோமேக்ஸ் செல்பேசி நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா கலந்து கொண்டார்.