Home இந்தியா விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்- திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்- திருமாவளவன்

783
0
SHARE
Ad

7-26-2011-45-thirumavalavan-hails-lankan-taஅரியலூர், பிப் 26 – நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதன் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது 2009-ஆம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றோம். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்கு எங்களால் முடிந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

அரியலூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் செய்யவேண்டும். 1-வது நடைமேடை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்தோம். அதன்படி தற்பொழுது அரியலூர் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice

நாங்கள் வரும் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறோம். கடந்த முறை 2 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். அதில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். ஒரு எம்.பி. மட்டும் இருந்ததால் அதிக பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.

அதனால் தி.மு.க. கூட்டணியில் வரும் தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என திருமாவளவன் கூறினார்.