தொண்டாமுத்தூர், பிப் 26 – கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் உள்ளே புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகின்றன.
அப்போது நடக்கும் மோதலில் மனிதர்களை மிதித்து கொன்று விடுவது வாடிக்கையாக உள்ளது. பூண்டி வனத்தில் வீரகாளியம்மன் கோயில் பகுதியில் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியும் நிலையில் ஆண் யானை ஒன்று நடமாடுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காட்டு யானைகள் மோதல் காரணமாக யானையின் தும்பிக்கை அடிப்பட்டு, காயம் அடைந்து இருக்கலாம் என தெரிகிறது. காயம் அடைந்த காட்டு யானையை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க போளூவாம்பட்டி வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.