Home One Line P1 சபாவில் தொடரும் அவலம், தலை துண்டிக்கப்பட்ட பிக்மி யானையின் சடலம் கண்டெடுப்பு!

சபாவில் தொடரும் அவலம், தலை துண்டிக்கப்பட்ட பிக்மி யானையின் சடலம் கண்டெடுப்பு!

704
0
SHARE
Ad
படம்: நன்றி சபா வனவிலங்குத் துறை

கோத்தா கினபாலு: கினாபாத்தாங்கான் ஆற்றில் மேலும் ஒரு பிக்மி யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த யானை கொல்லப்பட்டதாகக் நம்பப்படுகிறது.

இந்த கண்டெடுப்போடு, சபாவில் இறந்த யானைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 21-ஆக அதிகரித்துள்ளது.

சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லீவ் கூறுகையில், சமீபத்திய சம்பவங்கள் தம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும், இது குறித்து வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கிடைத்த தகவல்களின்படி, அந்த யானை கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை, ஏனெனில் அந்த யானையின் தலை காணப்படாததால் இது இன்னும் தெளிவாகத் தெரியவில்லைஎன்று நேற்று புதன்கிழமை இரவு ஊடக அறிக்கையில் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த கிறிஸ்டினா, சபாவில் இப்பெரிய பாலூட்டிகளின் அழிவு சாத்தியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதை ஒரு போதும் நடக்க விடமாட்டோம்.

போர்னியோ பிக்மி யானையின் தலைவிதி காண்டாமிருகத்தின்  தலைவிதியைப் போலவே இருக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் எல்லா தரப்புகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்என்று அவர் கூறினார்.

முன்னதாக திங்கட்கிழமை, பிக்மி யானையின் சடலம் கினாபாத்தாங்கான் ஆற்றில் மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.