Home One Line P1 கெந்திங் மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு, பயணிகள் கவனமாக இருக்க வேண்டுகோள்!

கெந்திங் மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு, பயணிகள் கவனமாக இருக்க வேண்டுகோள்!

992
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெந்திங் மலையின் சில பகுதிகளில், குறிப்பாக கடந்த செவ்வாயன்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கெந்திங் மலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் யூஸ்ரி அப்துல்லா சானி குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் உள்ள கட்டுமான இடங்கள் அபாயத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

நான்கு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தால், குறிப்பாக கட்டுமானப் பகுதியில் அதிகப்படியான மழை பெய்தால், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதுவரை ஆபத்தான பகுதியாக அயன் டி எலெமன் சாலை உள்ளது. அங்கு மூன்று கட்டுமானங்கள் நடந்து கொண்டிருக்கின்றனஎன்று அவர் நேற்று புதன்கிழமை அஸ்ட்ரோ அவானி தொடர்பு கொண்டபோது கூறினார்.

#TamilSchoolmychoice

தீயணைப்பு வீரர்கள் இந்த ஆபத்தான பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கனமழையின் போது தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள், நாங்கள் தீயணைப்பு இயந்திரங்களுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்வோம். செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த விரிவான கண்காணிப்பையும் நாங்கள் மேற்கொள்வோம்என்று அவர் கூறினார்.

அம்பர் கோர்ட் தங்கும் விடுதிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணிகளை தீயணைப்புத் துறை தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

மலைப் பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள் குறிப்பாக இந்த மழைக்காலத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் யூஸ்ரி அறிவுறுத்தினார்.