Home One Line P2 டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் வடிவமைப்பு குறித்த உரை

டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் வடிவமைப்பு குறித்த உரை

930
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இங்குள்ள டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தின் வடிவமைப்பு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் வடிவமைப்பு மீதான கருத்தரங்கமும் கண்காட்சியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி தொடங்கி ஒரு நாள் நிகழ்ச்சியாக, டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தின் 12-வது விரிவுரை அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கருத்தரங்கத்தில் கணினி நிபுணரும், எழுத்துரு வடிவமைப்பு நிபுணருமான முத்து நெடுமாறன் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். அவரது உரை காலை 11.40 மணிக்கு இடம் பெறும்.

தொடர்ந்து இந்தக் கருத்தரங்கத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் உரையாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

மேலும் சில வடிவமைப்புத் துறை நிபுணர்களும் இந்தக் கருத்தரங்கத்தில் உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் உண்டு. மேல்விவரங்களுக்கு கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம்:

Email: jinchi.yip@taylors.edu.my

முகநூல் பக்கம் : Troublemakers’ Manifesto