Home One Line P1 சபா: இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அக்டோபர் வரையிலும் 20 யானைகள் இறந்துள்ளன!

சபா: இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அக்டோபர் வரையிலும் 20 யானைகள் இறந்துள்ளன!

641
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை, 20 யானைகள் இறந்துள்ளன என்று சபா வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

அவை வேட்டையாடப்பட்டு, பொறியில் சிக்கி இறந்துள்ளன என்று அது பதிவு செய்துள்ளதாக சபா மாநில துணை முதல்வர் டத்தோ கிறிஸ்டினா லீவ் தெரிவித்தார்.

சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருக்கும் லீவ் கூறுகையில், யானைகளின் எண்ணிக்கை வாழ்விடம் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக மட்டுமல்லாமல், வேட்டையாடுதலாலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நிலைமை ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது சபாவின் சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக இருக்கும் மதிப்பை குறைத்து மதிப்பிடும் அளவிற்கு கொண்டு செல்லும். மேலும், உலக சந்தையில் செம்பனை விலையையும் குறைக்கும்என்று கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள லோக் காவி வனவிலங்கு பூங்காவில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுகான யானை தின நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் கூறினார்.

அவரது உரையை சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிரந்தர செயலாளர் டத்தோ வில்லியம் பயா வாசித்தார்.

காவல்துறை உட்பட பிற சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியுடன் வனவிலங்கு துறை கைது செய்யப்பட வேண்டிய  குற்றவாளிகளைக் கண்டறிவது மூலம் பிற சட்டவிரோத வேட்டைக்காரர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மின்சார வேலிகள், யானை இடமாற்றம் மற்றும் வலுவான தகவல் தொடர்பு இனைப்புகள் நிறுவுதல் மூலம் மனித மற்றும் யானை மோதலை நிர்வகிப்பதில் பல எண்ணெய் பனை உரிமையாளர்கள் அளித்த ஒத்துழைப்புக்கு லீ தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இது போன்ற முயற்சிகள் யானை மோதலின் சிக்கலை மிகவும் திறமையாகவும் விரைவாகவும் நேரடியாக தீர்க்க முடியும்,” என்று அவர் கூறினார்.