Home கலை உலகம் கதாநாயகிகளுடன் கவுதம் கார்த்திக் நெருக்கமா பழகுவாராம்!

கதாநாயகிகளுடன் கவுதம் கார்த்திக் நெருக்கமா பழகுவாராம்!

981
0
SHARE
Ad

tamil-movies-gautham-karthik-new-movie-launch-photos06சென்னை, பிப் 26  கதாநாயகிகளிடம் சகஜமாக பழகி அவர்களை தன் வலையில் வீழ்த்துவதில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக். ஆர்யா தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி கொடுத்து அசத்துவார். நயன்தாரா, அனுஷ்கா என்று பல கதாநாயகிகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

அவருக்கு போட்டியாக வந்திருக்கிறார் கவுதம் கார்த்திக். அந்த காலத்தில் கதாநாயகிகளிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் உடனே கார்த்திக் பேரை சொல்வார்கள். தற்போது அந்த இடத்தை பிடிக்கும் சுட்டியாக இருக்கிறார் அவரது மகன் கவுதம் கார்த்திக்.

தனக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளிடம் சிரித்து பேசி வசியம் செய்வதில் கில்லாடியாக உள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு வந்த கவுதமை தன் அருகில் வந்து அமரச் சொல்லி நீண்ட நேரம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார் லட்சுமி மேனன். தற்போது ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை என்ற படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

இதன் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குருஸ் என்ற ஆடம்பர கப்பலில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் உள்ளன. படப்பிடிப்பு முடிந்ததும் கவுதமும், பிரியாவும் அங்கு சென்று விளையாடி மகிழ்கின்றனர்.

இதுபற்றி பிரியா ஆனந்த் கூறும்போது, படப்பிடிப்பு முடிந்ததும் நானும் கவுதமும் கப்பலில் சுற்றிபார்பதுதான் வேலை. தியேட்டர், ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு என்று பல பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சென்றோம் என பிரியா ஆனந்த் கூறினார்.