Home Featured கலையுலகம் “அப்பா நலமாக உள்ளார்” – கௌதம் கார்த்திக்!

“அப்பா நலமாக உள்ளார்” – கௌதம் கார்த்திக்!

709
0
SHARE
Ad

gautham-karthik

சென்னை – பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி வதந்தி எனவும், வீண் வதந்திகளை பரபரப்ப வேண்டாம் எனவும் கார்த்திக்கின் மகனும், இளம் நடிகருமான கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்,

#TamilSchoolmychoice

இது குறித்து கௌதம் கார்த்திக், தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்பா நலமாக உள்ளார். என் அப்பா குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. அவர் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றார். இதய நோயெல்லாம் இல்லை. வதந்திகளை தயவுசெய்து நிறுத்தவும்” என்று தெரிவித்துள்ளார்.