Home Featured கலையுலகம் நடிகர் கார்த்திக் உடல் நலக் குறைவு! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகர் கார்த்திக் உடல் நலக் குறைவு! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

1029
0
SHARE
Ad

karthikசென்னை – மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனும் பிரபல நடிகருமான கார்த்திக் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் கார்த்திக். பல படங்களில் நடித்து அந்தக் கால இளைஞர்களைக் கவர்ந்த கார்த்திக், அந்தக் கால யுவதிகளின் கனவு நாயகனாகவும் திகழ்ந்தவர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்த கார்த்திக் ‘இராவணன்’ படத்தில் நடித்தார். அண்மையில் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்திலும் நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இடையில் அரசியலிலும் ஆர்வம் காட்டிய கார்த்திக், ஒரு புதிய கட்சியைத் தொடக்கி அதற்குத் தலைவராகவும் அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.

அவரது மகன் கௌதம் கார்த்திக் ‘கடல்’ படம் மூலம் இயக்குநர் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், கார்த்திக்கின் உடல் நிலை தற்போது தேறி வருவதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.