Home கலை உலகம் ரஜினிக்கு உருவான கதையில் அஜீத் நடிக்கிறார்!

ரஜினிக்கு உருவான கதையில் அஜீத் நடிக்கிறார்!

522
0
SHARE
Ad

Ajithசென்னை, பிப் 27 – மங்காத்தாவிற்கு பிறகு பில்லா-2 தோல்வியடைந்தபோதும், ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றியின் காரணமாக கோடம்பாக்கத்தில் வெற்றி வலம் வருகிறார் அஜீத். இந்தநிலையில், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர், புதிய கதைகளை  கவனமாக தேர்வுசெய்கிறார்.

என்னதான் தன்னை வைத்தே வெற்றி படம் கொடுத்த இயக்குனர்களாக இருந்தாலும், கதை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதை முன்வைத்தே கேட்கத் தொடங்குகிறார் அஜீத். அந்த வகையில், ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா இரண்டு பேருமே மீண்டும் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், கதையை உள்வாங்கிக்கொண்ட அஜீத், இன்னும் முடிவு சொல்லவில்லை. அதேசமயம், தற்போது அனேகன் படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த் சொன்ன கதை அஜீத்துக்கு ரொம்ப பிடித்து விட்டது. இந்த கதைதான் ரஜினிக்காக அவர் உருவாக்கிய கதை. அதனால் கதையில் எந்த திருத்தமும் சொல்லாமல் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் அஜீத்.

#TamilSchoolmychoice

மார்ச் இறுதியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்தை முடித்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதை இப்போதே முடிவு செய்துவிட்டார். இவ்வாண்டு இறுதியில் அப்படமும் தொடங்கப்பட்டு விடும் என தெரிவித்தார் அஜீத்.