Home இந்தியா ‘ஆண்மையற்றவர்’ என்ற மோடி குறித்தான சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராகுல் கண்டனம்!

‘ஆண்மையற்றவர்’ என்ற மோடி குறித்தான சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராகுல் கண்டனம்!

500
0
SHARE
Ad

Tamil_Daily_News_45621454716டெல்லி, பிப் 27 – நரேந்திர மோடி குறித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் விமர்சனத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆண்மையற்றவர்  என்று சல்மான் குர்ஷித் விமர்சித்திருந்தார். மோடி குறித்தி குர்ஷித்தின் இத்தகைய விமர்சனத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சல்மான் குர்ஷித், குஜராத் கலவரத்தை தடுக்க முடியாத மோடி, ஆண்மையற்றவர் என்று கடுமையாக பேசினார்.

#TamilSchoolmychoice

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, விரக்தியின் விளிம்பில் உள்ள காங்கிரஸ் இது போன்ற விமர்சனங்களை செய்வதாக புகார் கூறியுள்ளது. ஆனாலும் தமது விமர்சனத்தில் மாற்றம் இல்லையென்று குர்ஷித் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.