Home கலை உலகம் வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்டேன் – ஹன்சிகா!

வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்டேன் – ஹன்சிகா!

604
0
SHARE
Ad

Kollywood-news-8560சென்னை, பிப் 28 – சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது. இவர்கள் காதலை பிரித்தது யார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி காதலர்கள் சிம்பும், நயன்தாராவும் இது நம்ம ஆளு படம் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

அப்போது இருவருமே நண்பர்களாகிவிட்டோம் என்றனர். இதற்கிடையில் வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதை இருவருமே தங்களது இணையத்தள பக்கத்தில் அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.  அதனால் ஹன்சிகாவுக்கு வந்த பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இதை கண்ட அவரது அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார். அதையும் மீறி ஹன்சிகா சிம்புவை காதலித்து வந்தார். கடந்த மாதம் சிம்புக்கு பிறந்த நாள். அப்போது நேரில் சென்று அவருக்கு வாழ்த்து கூறினார். இந்த சம்பவம் பற்றி அறிந்த ஹன்சிகாவின் அம்மா கோபமடைந்தார். இனி சிம்புவை காதலிக்க கூடாது.

#TamilSchoolmychoice

அப்படி செய்தால் நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன்‘ என்று ஹன்சிகாவை மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன் ஹன்சிகாவை கண்காணிக்க தொடங்கினார். படபிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று நிபந்தனையிம்போட்டு அவரை வீட்டிலேயே சிறை வைப்பதுபோல் காவல் காக்க தொடங்கினார்.

ஹன்சிகாவுக்கு துணையாக அவரது தாய் மட்டுமே இருக்கிறார். எனவே அவரை பிரிய ஹன்சிகாவின் மனம் இடம் தரவில்லை. இதையடுத்தே சிம்புவை பிரிய ஹன்சிகா முடிவு செய்தார். இதையறிந்த சிம்புவும் தன்னால் ஹன்சிகாவுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் அவரை மறக்க முடிவு செய்தார். இதையடுத்து, ஹன்சிகாவுடனான என் உறவு இத்துடன் முறிந்துவிட்டது.

இருவரும் பேசியே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இதற்குமேல் எதுவும் கூற விரும்பவில்லை‘ என்று சிம்பு வெளிப்படையாக நேற்று தெரிவித்தார்.  ஹன்சிகாவும் சிம்புவை பிரிந்துவிட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

‘நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் இணைந்து நடிப்பதுதான் ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதா? என்று ஹன்சிகா தரப்பில் கேட்டபோது அதற்கு பதில் தர மறுத்துவிட்டனர்.