லக்னோ, மார் 3 – உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகாலத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என்று குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது, உத்தரப்பிரதேசத்தில் குண்டர்களாலும் துப்பாக்கிகளாலும்தான் அரசு நடைபெற்று வருகிறது.
இந்த மாநிலத்தில் வெறுப்பு அரசியல்தான் நடைபெறுகிறது. நேதாஜி என்று அழைக்கப்படுகிறவர் (மோடி) வளர்ச்சியைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவரைப் பொறுத்தவரை வாக்கு அரசியல்தான் எல்லாமே. இந்த மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகாலத்தில் குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை. உங்களை எங்களுடன் எப்படி ஒப்பிட முடியும்? உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்பாக 20 ஆயிரம் வழக்குகள் ஒரு ஆண்டில் மட்டும் பதிவாகி இருக்கின்றன. அது சமாஜ்வாடி கட்சி.
மக்கள் விரோத கட்சி என மோடி பேசினார். மோடியின் இந்த கூட்டத்துக்காக 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 4,500 பேருந்துகள், 25 ஆயிரம் கார்கள், 50 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் மோடியின் கூட்டத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.