Home இந்தியா விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள்!

விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள்!

755
0
SHARE
Ad

Actor-Vijay-'Makkal-Iyakkam-meet-11திருப்பூர், மார் 3 – தாராபுரத்தைச் சேர்ந்த இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டுவந்தது. தற்போது இந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் இளைய தளபதி விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

அவர்களுக்கு தேவையானதை செய்து தருபவர்களுக்கு மட்டும் இயக்கத்தில் முன்னுரிமை தருகிறார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. பண நாயகம் தான் உள்ளது. இவை எல்லாவற்றையும் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் பல முறை தபால் மூலம் தகவலை கொண்டு சென்றும் பலன் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தாராபுரம் விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் ஜாபர் சாதிக், நகர துணைத் தலைவர் ஜூபேர், நகர இளைஞரணி தலைவர் ராமதாஸ், நகர இளைஞரணி துணைச் செயலாளர் மாரிமுத்து, ஒன்றியத் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், இயக்க தொண்டர்களும் இயக்கத்தை முழுமையாக கலைத்துவிட்டார்கள்.

#TamilSchoolmychoice

இதன் அடுத்த கட்டமாக அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சின் தமிழக பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்துவிட்டார்கள். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இயக்க முன்னணி நிர்வாகிகளுக்கும் தூதுவிடும் படலம் அரங்கேறி வருகின்றன. இதில் குஷியான ஆம் ஆத்மி தரப்பு விரைவில் தமிழகத்தில் இருந்து பல முக்கிய இளைஞர்கள் ஆம் ஆத்மியில் இணைய உள்ளனர் என சொல்கின்றது.