Home உலகம் 2 போர்க் கப்பல்களை அனுப்பியது ரஷியா-பதிலடி கொடுக்க தயாராகிறது உக்ரைன்!

2 போர்க் கப்பல்களை அனுப்பியது ரஷியா-பதிலடி கொடுக்க தயாராகிறது உக்ரைன்!

560
0
SHARE
Ad

03-russia-war-ships-600-jpgமாஸ்கோ, மார் 3 – உக்ரைன் நாட்டு கடற்பகுதிக்கு 2 போர்க்கப்பல்களை ரஷியா அனுப்பியிருப்பதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷியா அருகிலுள்ள உக்ரைன் நாட்டில் 3 மாத போராட்டத்தின் விளைவாக அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் பதவி பறிக்கப்பட்டது. இவர் தப்பி ஓடி ரஷியாவில் தஞ்சம் புகுந்தார்.

உக்ரைன் இடைக்கால அதிபராக ஒலேக்சாண்டர் துர்ஷிநோவ், பிரதமராக அர்செனி யாத்செனியுக் ஆகியோர் பொறுப்பு ஏற்றனர். ஆனாலு ஒருசில நாட்களே போராட்டம், பதற்றம் அடங்கியது. ரஷியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் திடீரென்று குழப்பம் தொடங்கியது.

ரஷிய ஆதரவாளர்கள் தலைநகரிலுள்ள அரசாங்க அலுவலகங்களை கைப்பற்ற, ரஷிய ராணுவமும் நுழைந்து 2 விமான நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இது மேலும் 2 நகரங்களுக்கு பரவி ரஷிய ஆதரவாளர்களுக்கும், இடைக்கால அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. ரஷியாவின் ராணுவ தலையீட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் உக்ரைன் பகுதியில் இருந்து ராணுவத்தை ரஷியா விலக்கவில்லை. இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்ப ரஷிய நாடாளுமன்றமும் ஒப்புதல் கொடுத்தது. ரஷியா 2 போர்க்கப்பல்களை உக்ரைன் கடல் பகுதிக்கு அனுப்பியது. இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு 2 போர் கப்பல்களும் செவாஸ்தோபோல் நகருக்கு அருகே கருங்கடல் பகுதியில் நடமாடுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ராணுவ தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையினருடன் உக்ரைன் இடைக்கால அதிபர் ஒலெக்சாண்டர் துர்ஷிநோவ் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதோடு பிரதமர் யாத்செனியுக் இந்த விவகாரம் குறித்து ரஷிய பிரதமர் டிமிதே மெட்வதேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷியா ராணுவத்தை உடனே வாபஸ் பெற கேட்டுக்கொண்டார். ரஷியா-உக்ரைன் நாடுகள் பதிலுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலைக்கு ஆயத்தமாகி வருவதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.