Home உலகம் பாக்கிஸ்தான் நீதிமன்றதில் புகுந்து தாக்குதல் – நீதிபதி உள்ளிட்ட 5 பேர் பலி!

பாக்கிஸ்தான் நீதிமன்றதில் புகுந்து தாக்குதல் – நீதிபதி உள்ளிட்ட 5 பேர் பலி!

476
0
SHARE
Ad

mumbai-attackஇஸ்லாமாபாத், மார் 4 – பாக்கிஸ்தானில் நீதிமன்ற வளாகத்தில் புகுந்து இன்று பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் வக்கீல்கள், நீதிமன்றத்திற்கு வந்தவர்கள், நீதிபதி என 11 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இன்று வழக்கம் போல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் செயல்பட்டு கொண்டிருந்தது.

இந்நேரத்தில் ஒரு மனித வெடிகுண்டு வெடித்தது. தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகள் வீசப்பட்டது. இதில் நீதிமன்றத்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதில் ஒருவர் செஷன்ஸ் நீதிபதியும் அடங்குவார். இதனையடுத்து இங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 12 நிமிடங்கள் இந்த அதிரடி தாக்குதல் நடந்தது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு சிறப்பு கமாண்டோ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டனர். இந்த பயங்கரவாத அமைப்பினர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என இன்னும் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

முன்னாள் பாதுகாப்பு செயலர், தலாத் மசூத் கூறுகையில், இது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுத்து பயங்கரவாதிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்  என முன்னாள் பாதுகாப்பு செயலர், தலாத் மசூத் கூறுனார்.