Home தொழில் நுட்பம் ஐபோன் 6, சாம்சங் 5எஸ் இடையே கடும் போட்டி நிலவலாம்!

ஐபோன் 6, சாம்சங் 5எஸ் இடையே கடும் போட்டி நிலவலாம்!

578
0
SHARE
Ad

samsung_galaxy_s5_vs_iphone_6மார்ச் 4 – ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடான  iPhone 5S மற்றும் iPhone 5C ஐ கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, iPhone 6 பற்றிய தகவல்களை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு  வருவதாகக் கூறப்படுகின்றது.

அதோடு, அதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், iPhone 6 திறன்பேசியில் இருவகைகளை வெளியிடப்போவதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் iPhone 6 அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 6 க்கு சவால் விடும் வகையில், சாம்சங் நிறுவனம் தனது Galaxy 5s ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

#TamilSchoolmychoice

இதனால் iPhone 6 க்கும், Galaxy 5s க்கும் சந்தையில் கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 150 நாடுகளில் Samsung Galaxy S5 விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.