Home உலகம் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்-இலங்கை அரசு தகவல்!

மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்-இலங்கை அரசு தகவல்!

595
0
SHARE
Ad

ds1கொழும்பு, மார் 4 – சர்வதேச மனித உரிமை கூட்டம், ஜெனிவாவில் நேற்று, துவங்கியது. போர் குற்றம் குறித்து உரிய விசாரணை நடத்த தவறிய இலங்கைக்கு எதிராக இந்த கூட்டத்தில் அமெரிக்கா மூன்றாவது முறையாக தீர்மானம் கொண்டு வரும் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக  இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009-ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது. சரண் அடைய சென்ற ஏராளமான விடுதலை புலிகளை, இலங்கை ராணுவம் சுட்டு கொன்றதாக புகார் உள்ளது. இறுதி கட்ட சண்டையின் போது நடந்த, போர் குற்றங்கள் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்  என  பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இலங்கையில் போர் பாதித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய, அமெரிக்கா, நீதிபதி ஒருவரும், வெளியுறவு துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வாலும், சமீபத்தில் கொழும்பு பயணம் மேற்கொண்டனர். ஐ.நா.மனித உரிமை ஆணைய தலைவர்  நவநீதம் பிள்ளை, இலங்கை போர் குற்றம் குறித்து, சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர்  74 பக்க அறிக்கையை ஐ.நா.வில் கடந்த மாதம் சமர்பித்துள்ளார். இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால், சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் சர்வதேச மனித உரிமை ஆணைய கூட்டம் நேற்று துவங்கியுள்ளது. பிரிட்டன், கனடா, மற்றும் நவநீதம் பிள்ளையின் அறிக்கைகள் இந்த கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளன.

இதையடுத்து, இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகள் செய்துள்ளதாக இலங்கை அதிபரின் தகவல் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்துள்ளார்.