Home கலை உலகம் ஸ்ருதி – அனிரூத் நெருக்கம் கோலிவுட்டில் பரபரப்பு!

ஸ்ருதி – அனிரூத் நெருக்கம் கோலிவுட்டில் பரபரப்பு!

574
0
SHARE
Ad

Kollywood-news-8584சென்னை, மார் 4 – ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் அனிரூத் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் காரணமாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த படத்துக்கு அனிரூத் இசையமைத்தார். அப்போதே அனிரூத், ஸ்ருதி இடையே நட்பு ஏற்பட்டது.

அதற்கு பிறகும் அவர்கள் நட்பு தொடர்ந்து. சமீபத்தில் ஒரு படத்தில் பின்னணி பாட ஸ்ருதியை அழைத்தார் அனிரூத். இந்தி பட படபிடிப்பில் இருந்த ஸ்ருதி, அனிரூத் அழைத்ததும் உடனே சென்னைக்கு வந்தார். பாடல் தொடர்பாக எந்த கேள்வியும் கேட்காமல் பின்னணி பாடினார்.

பிறகு இருவரும் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்கள். அப்போது இருவரும் சேர்ந்து புகைபடங்கள் எடுத்துக்கொண்டனர். ஸ்ருதி, அனிரூத் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள். இசையால் இருவரும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் நெருங்கி பழகுகிறார்கள். இவர்களிடையே நட்பை தாண்டி ஏதாவது உண்டா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.