Home இந்தியா இளைஞர் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கப்போகிறேன்- ஜெகன்மோகன் ரெட்டி உறுதிமொழி!

இளைஞர் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கப்போகிறேன்- ஜெகன்மோகன் ரெட்டி உறுதிமொழி!

592
0
SHARE
Ad

25-jaganmohan-reddy-600எலிரு, மார் 4 – எலிரு நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசும்போது, 9 ஆண்டுகாலம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், எனவே அவர் மக்களிடமிருந்து ஓட்டுக்களை பெற உரிமையில்லாதவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆந்திராவின் வேகமான வளர்ச்சியை வைத்து ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும் திறன்களை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இளைஞர்களின் தேவைகளை தான் அறிந்திருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுக்கு அதெல்லாம் தெரியாது என்றும் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தான் ஆட்சிக்கு வந்த பின்னர் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு இளைஞர்கள் நிலை தெரியாது. சீமாந்திராவை சிங்கப்பூராக்குவேன் என்று உறுதிமொழி அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார் என்றும் ஜெகன்மோகன் கூறினார். மேலும் அவர் இளைஞர் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.