Home இந்தியா ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள், ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு!

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள், ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு!

1031
0
SHARE
Ad

அமராவதி: ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ஐந்து துணை முதல்வர்களை நியமனம் செய்துள்ளார்

இன்று வெள்ளிக்கிழமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் 25 அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் ஐந்து துணை முதல்வர்கள் செயல்படுவார்கள் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்

நாளை சனிக்கிழமை இவர்களுக்கான பதவி ஏற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. பட்டியல் இனத்தவர்களில் இருந்து ஒருவர், பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்த ஒருவர், பிற்படுத்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர், சிறுபான்மையினர்களில் இருந்து ஒருவர் மற்றும் காபு சமூகத்தில் இருந்து ஒருவர் என்று துணை முதல்வர்கள் பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது

#TamilSchoolmychoice

அதேபோல மாநில அமைச்சரவையில் அதிகமானோர் நலிவடைந்த சமூகத்தில் இருப்பவர்கள்தான் இருப்பர் எனவும் ஜெகன் ரெட்டி கூறியுள்ளார்

அமைச்சரவை எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து சிறிது காலத்தில் மறுபரிசீலணை செய்யப்பட்டு, மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசில், இரண்டு துணை முதல்வர்கள் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.