டோக்கியோ, மார்ச் 4 – உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சோனி (Sony) நிறுவனம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள தனது தலைமையகத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
தங்களது தயாரிப்பு சாதனங்களையும், நிறுவனத்தையும் புதுபிக்கும் நோக்கில் சோனி நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த வருட இறுதிக்குள் 1000 பணியாளர்களை தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் சோனி, அமெரிக்காவிலுள்ள 20 கிளைகளையும் மூடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டோக்கியோவிலுள்ள தலைமையகத்தினை விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இதனை விற்பனை செய்வதன் மூலம் 146.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக சோனி பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.