Home Featured உலகம் இறந்ததாக தவறான தகவல்: பிரிட்னி ஸ்பியர்சிடம் சோனி நிறுவனம் மன்னிப்பு!

இறந்ததாக தவறான தகவல்: பிரிட்னி ஸ்பியர்சிடம் சோனி நிறுவனம் மன்னிப்பு!

722
0
SHARE
Ad

britney-spearsநியூயார்க் – கடந்த திங்கட்கிழமை பிரபல சோனி மியூசிக் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்த ஹேக்கர்ஸ், அதில் உலகப் புகழ்பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் விபத்தில் இறந்துவிட்டதாக அறிவிப்பு செய்தது.

இதனால் உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள், சில மணி நேரங்கள் மிகவும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். அதன் பின்னர் தான் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

sonyஇந்நிலையில், இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டதற்காக சோனி மியூசிக் நிறுவனம் பிரிட்னி ஸ்பியர்சிடமும், அவரது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது.

#TamilSchoolmychoice