Home உலகம் சோனி பிக்சர்ஸ் – வட கொரியா மீது பொருளாதாரத் தடை!

சோனி பிக்சர்ஸ் – வட கொரியா மீது பொருளாதாரத் தடை!

653
0
SHARE
Ad

sony-pictures-logoபியாங்யாங்க், ஜனவரி 5 – சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக வட கொரியா மீது, அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவினை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இதன்படி, வட கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், 10 நபர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “வடகொரியா, அமெரிக்காவை தொடர்ந்து சீண்டி வருகின்றது”.

#TamilSchoolmychoice

“நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வட கொரியா தெரிவித்து வருகின்றது. குறிப்பாக, அண்மையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது அந்த நாடு நிகழ்த்திய சைபர் தாக்குதல் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது.”

“அதற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் மீது, வட கொரியா ஏற்படுத்திய பெரும் பொருளாதார இழப்பையும், கலைஞர்கள் அச்சுறுத்தப்படுவதையும் அமெரிக்கா சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது” என்று அவர் கூறியுள்ளார்.

வட கொரிய அதிபரை கேலி செய்வது போல் படமாக்கப்பட்ட ‘தி இன்டர்வியூ’ (The Interview) திரைப்படத்தை சோனி பிக்கசர்ஸ் தயாரித்ததை எதிர்க்கும் வகையில், அந்நிறுவன இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.