Home Featured கலையுலகம் ‘ஸ்டார் வார்ஸ்’ நடிகை கேரி பிஷர் காலமானார்!

‘ஸ்டார் வார்ஸ்’ நடிகை கேரி பிஷர் காலமானார்!

611
0
SHARE
Ad

carrie-fisher-star-wars-daysலாஸ் ஏஞ்சல்ஸ் – புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் படங்களில் இளவரசி லியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை கேரி பிஷர் நேற்று செவ்வாய்க்கிழமை இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 60.

கடந்த வெள்ளிக்கிழமை இலண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணம் செய்யும்போது, விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக பிஷருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைகள் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

carrie-fisher

#TamilSchoolmychoice

கேரி பிஷர் – அண்மையத் தோற்றம்…

வேற்று கிரக நடப்புகளை சினிமா இரசிகர்களின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உலகம் எங்கும் வசூலில் கலக்கியவை ஸ்டார் வார்ஸ் என வரிசையாக வெளிவந்த படங்கள். 1977 முதல் 1983 வரை முதல் மூன்று ஸ்டார் வார்ஸ் படங்களில் இளவரசி லியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிஷர் பின்னர் 2015-இல் வெளிவந்த “ஸ்டார் வார்ஸ்: போர்ஸ் எவேக்கன்ஸ்”  (Star Wars: The Force Awakens) படத்திலும் நடித்திருந்தார்.

பல ஹாலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் கேரி பிஷர் நடித்து இரசிகர்களிடையே புகழ் பெற்றிருந்தார்.