Home Featured தமிழ் நாடு கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி வாங்கிய சசிகலா குடும்பம் – அம்பலப்படுத்தும் காணொளி!

கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி வாங்கிய சசிகலா குடும்பம் – அம்பலப்படுத்தும் காணொளி!

1320
0
SHARE
Ad

gangaiசென்னை – பாட்டு பாடி, கச்சேரிகளுக்குப் போய் கொஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்த சொத்தை, சசிகலா குடும்பம் ஒரே நொடியில் மிரட்டி பிடுங்கிக் கொண்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

‘அறப்போர் இயக்கம்’  என்ற அமைப்பு, “WHO IS THE  BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் ஆய்வு படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சொத்து விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக ஆய்வு செய்து, விவரங்களைப் பெற்று தக்க ஆதாரங்களுடன் காணொளி வெளியிட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலான கங்கை அமரினின் பண்ணை வீட்டை, சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மிரட்டி வாங்கியது தொடர்பான தகவல்கள் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதா உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறி சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன், கங்கை அமரனை கார்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, கங்கை அமரனின் பங்களா, ஜெயலலிதாவிற்குப் பிடித்துவிட்டதாகக் கூறி பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அந்த பங்களாவை விற்க விருப்பமில்லை என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

அதன் பின்னர், தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது. இறுதியாக, ஒருநாள், கங்கை அமரனின் வீட்டிற்கு  பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் சென்று, கங்கை அமரனையும்  அவருடைய மனைவியையும் மிரட்டி கையெழுத்துப் போட வைத்ததாக அந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த பங்களாவை வெறும் 13 லட்சத்திற்கு அவர்கள் மிரட்டி வாங்கிக் கொண்டதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-