Home இந்தியா அடுத்த பத்தாண்டுகள் வளர்ச்சியை நோக்கி இருக்கும்-நரேந்திரமோடி!

அடுத்த பத்தாண்டுகள் வளர்ச்சியை நோக்கி இருக்கும்-நரேந்திரமோடி!

502
0
SHARE
Ad

29TH_MODI_1251820fமுஷாபர்பூர், மார் 4 – பீகார் மாநிலம், முஷாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்னமும் நமது தாய்மார்கள், பெண் குழந்தைகள் கழிப்பறை வசதி இல்லாமல் தான் உள்ளனர். இதற்காக வெட்கப்பட வேண்டும். இது என்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது.

நான் இப்போது சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த பத்தாண்டுகள், வளர்ச்சியை நோக்கியே இருக்கும். குறிப்பாக, ஏழை, நடுத்தர, தலித் மக்களின் வளர்ச்சியை கொண்டதாக அந்த காலகட்டம் இருக்கும். மக்கள் ஏமாற்றும் அரசியல்வாதிகளை மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி.