Home இந்தியா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் காஷ்மீரில் 2 போலீஸார் பலி!

தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் காஷ்மீரில் 2 போலீஸார் பலி!

509
0
SHARE
Ad

tbltopnews1_1015871764-300x205ஸ்ரீநகர், மார் 4 – காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு அருகே போலீஸார் நேற்று காலை வாகனத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று போலீஸ் வாகனத்தை நோக்கி சுட்டது. இதில், போலீஸ் வாகனத்தில் இருந்த 4 போலீஸார் படுகாயமடைந்தனர்.

அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சக போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்  2 போலீஸாரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர்களது பெயர் குர்ஷித் அகமது மற்றும் முக்தார் அகமது என்று தெரியவந்தது. மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினர் எனவும், ஆனால் இதுவரை இச்சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீஸ் தரப்பினர் தெரிவித்தனர். மேலும் வாகனம் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க போலீஸார் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.