Home Kajang by-Election கண்ணியமான முறையில் பிரச்சாரம் – முகைதீன் யாசின் அறிவிப்பு

கண்ணியமான முறையில் பிரச்சாரம் – முகைதீன் யாசின் அறிவிப்பு

653
0
SHARE
Ad

muhyiddin-yasinகோலாலம்பூர், மார்ச் 4 – காஜாங் இடைத்தேர்தலில் எதிரணியினருக்கு எதிராக நேர்மையான முறையில் பிரச்சாரம் செய்வோம். ஆனால் தனி நபர் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று துணைப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முகைதீன், “எங்களுடைய பிரச்சாரம் கண்ணியமான முறையில் இருக்கும். நாங்கள் எதிரணியினருக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம். காரணம் நாங்கள் அப்படி பிரச்சாரம் செய்யவில்லை என்றால் மக்கள் எங்களை பலவீனமானவர்கள் என்று நினைப்பார்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம், அம்னோ தகவல் தொடர்புத்துறை தலைவர் அகமட் மஸ்லான் வெளியிட்ட அறிக்கையில், பிகேஆர் வேட்பாளர் அன்வாருக்கு எதிராக அவர்களின் ‘பாலியல் குற்றச்சாட்டுகளை’ முன்வைத்து பிரச்சாரம் செய்வோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், தேர்தல் பிரச்சாரத்தில் தனி நபர் தாக்குதல் கூடாது என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.