Home கலை உலகம் ரஜினிக்கு ஜோடி அனுஷ்கா?

ரஜினிக்கு ஜோடி அனுஷ்கா?

525
0
SHARE
Ad

Anushkaசென்னை, மார் 5 – ரஜினியை வைத்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பார் எனத் தெரிய வந்துள்ளது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்றும், கன்னட – தமிழ் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புதிய படம் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற எதிர்ப்பார்ப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்தப் படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பேசப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. இப்போது அவர் பெயர் மீண்டும் அடிபட ஆரம்பித்துள்ளது குறித்து கேட்டபோது, ‘நீங்கள் சொல்லித்தான் எனக்கே விஷயம் தெரிகிறது. வாய்ப்பு கிடைத்தால் அதைவிட மகிழ்ச்சி எதுவுமில்லை என்றார் அனுஷ்கா.