Home கலை உலகம் கௌதம் மேனனுக்காக 8 பேக்ஸ் வைக்கும் அஜீத்!

கௌதம் மேனனுக்காக 8 பேக்ஸ் வைக்கும் அஜீத்!

568
0
SHARE
Ad

0002சென்னை, மார் 5 – வீரம் படத்தை அடுத்து அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஏற்கனவே நடிப்பதாக இருந்து அது  நடக்காமல் போனது. இதையடுத்து தற்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மங்காத்தாவில் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் என்ற நரைத்த தலைமுடியுடன் வந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதே வேடத்தில் ஆரம்பம், வீரம் ஆகிய படங்களிலும் தொடர்ந்தார். கௌதம் மேனன் படத்தில் அஜீத் நரைத்த முடியுடன் வராமல் கருப்பு முடியுடன் இளமையாக வருகிறார்.

முதன் முதலாக அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கௌதம் மேனன் காவல் அதிகாரி கதையை தெரிவித்தார். காவல் அதிகாரியாக நடிக்கும் அஜீத் தற்போது ஜிம்மிலேயே இருக்கிறார். இந்த படத்திற்காக அவர் 8 பேக்ஸ் வைக்கிறாராம். ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்யும் அஜீத் இதுவரை 7 கிலோ எடையை குறைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் எடையைக் குறைக்க தான் படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜீத்தை வைத்து தான் இயக்கும் படத்திற்கு இசையமைக்குமாறு கௌதம் மேனன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கௌதம், அஜீத் சேரும் இந்த படத்தின் படப்பிடிப்பை 5 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். படத்தை தீபாவளியன்று வெளியிட நினைக்கிறார்கள்.