வாஷிங்டன், மார் 5 – பேட்ரிக் ஸ்னாய் (69), புளோரிடாவில் உள்ள குலிவேர் ப்ரிபரேடரி பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியராக பணியாற்றியவர். பேட்ரிக் ஸ்னாய் தலைமையாசிரியராக இருந்தபோது அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அவர் வென்றி பெற்றதால் இழப்பீடாக $ 80,000 (மலேசியா400000)- தர வேண்டும் என்று பள்ளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பேட்ரிக் ஸ்னாய் வழக்கில் வெற்றி பெற்ற செய்தியை அவருடைய மகள் டானா, பேஸ்புக்கில் எழுதியிருந்தாள். இது பேஸ்புக் நண்பர்கள் மூலம் பரவி கடைசியில் குலிவேர் பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கும் போனது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் செட்டில்மென்ட் ஒப்பந்தம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே பேஸ்புக்கில் செய்தியை போட்டது ஒப்பந்தத்தின் மீறலாகும்.
எனவே ஒப்பந்தப்படி பேட்ரிக் ஸ்னாய்க்கு $ 80,000 இழப்பீடு தொகையை வழங்க முடியாது என்று கூறிவிட்டது. பேட்ரிக் மகளின் பேஸ்புக் தனத்தால் அவருக்கு கிடைக்க வேண்டிய $ 80,000 இழப்பீடு தொகை கிடைக்காமல் போய்விட்டது.
இதையடுத்து பேட்ரிக் ஸ்னாய் மீண்டும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றமும் பேட்ரிக் ஸ்னாயின் மகள் செட்டில்மென்ட் ஒப்பந்தம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே பேஸ்புக்கில் செய்தியை போட்டது விதி மீறல் செயலாகும் என்று கூறி உத்தரவிட்டுள்ளது.