Home உலகம் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!

829
0
SHARE
Ad

Tamil_Daily_News_63022577763ஜெனீவா, மார் 5 – இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் அமெரிக்க தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அமெரிக்காவும் இக்கோரிக்கையை வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.

தனது கோரிக்கையை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்தது.
இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 25-வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். எதிர்பார்க்கப்பட்டதுபோல் அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, மான்டேனெக்ரோ, மேசிடோனியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள், இக்கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

#TamilSchoolmychoice

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை முழுமையாக தோல்வி அடைந்துவிட்ட நிலையில், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

உள்நாட்டு போரின்போது, 40,000 தமிழர்கள் வரை, இலங்கை ராணுவத்தினரால் அமைதிப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான பலமான ஆதாரத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. நிபுணர்களும் வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அங்கு தனிப்பட்ட மற்றும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணை தேவை.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றுதல், மறுகட்டமைப்பு மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பணிகளில், வரும் ஓராண்டு காலத்துக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அந்நாட்டு அரசு வெளிப்படுத்த வேண்டும். இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்க உள்ள 27-வது கூட்டத் தொடரில் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த செப்டம்பரில் நடக்கும் கூட்டத்தில், அவர் எழுத்துப்பூர்வமாக இதை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும், தமிழர் பகுதிகளில் ஏராளமான அளவு ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும்.

இவர்களால் மனித உரிமைகள் தொடரப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி இலங்கை விவகாரம் விவாத்துக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. அன்றைய தினம், அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.