Home நாடு அல்லாஹ் விவகாரம்: கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

அல்லாஹ் விவகாரம்: கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

668
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், மார்ச் 5 – கத்தோலிக்க வார இதழான தி ஹெரால்ட்டில், கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், தேவாலயத்தின் மேல்முறையீட்டிற்கான அனுமதி கோரும் மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று விசாரணை  செய்தது.

தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா தலைமையிலான ஏழு பேர் அடங்கிய குழு இம்மனுவை விசாரணை செய்தனர்.

மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ராவுஸ் ஷரீப், மலாயாவின் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹ்மட் மக்கினுடின், சாபா சரவாக் மாநில தலைமை நீதிபதி ரிச்சர்ட் மாலான்ஜும், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான சுரியாடி ஹலிம் ஒமார், ஸைனுன் அலி மற்றும் ஜெப்ரி டான் ஆகியோர் இந்த குழுவில் உள்ள நீதிபதிகளாவர்.

#TamilSchoolmychoice

நீதிமன்ற முடிவை எதிர்நோக்கி, இன்று காலை 7 மணி முதல் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த 3000 பேருக்கும் மேல் கூடியிருந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் சாதகமான தீர்ப்பை வேண்டி பிரார்த்தனைகளை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

தி ஹெரால்ட் வார இதழ் அல்லாஹ் என்ற சொல்லை அதன் மலாய் பதிப்பில் பயன்படுத்தக் கூடாது என்ற மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய கத்தோலிக்க தேவாலயத்தை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் காத்திருக்கின்றனர்.

அதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், கூட்டரசு நீதிமன்றத்தில் தேவாலயத்தின் மனு தொடர்பாக விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.