காஜாங், மார்ச் 8 – அன்வாருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் பிகேஆர் தலைவர்களும், ஆதரவாளர்களும் நேற்று காஜாங் தேர்தல் மையத்தில் கூடினர்.
சுமார் 500 பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி, “இந்த இடைத்தேர்தலில் போராடப் போகிறோமா? அல்லது வீதிக்கு வரப் போகிறோமா?” என்று உரக்க கத்தினார்.
“52 சதவிகித வாக்குகளைப் பெற்று நாம் வெற்றி பெற்றிருந்தாலும், இன்னும் ஆட்சியும், அதிகாரமும் அவர்கள் கையில் தான் உள்ளது. ஊழல்வாதிகளும், கொள்ளையர்களும் அடங்கிய அந்த அணியை தேர்தலில் வெற்றியடைய விடக்கூடாது. அவர்களை வீதிக்கு கொண்டு வர வேண்டும்” என்றும் அஸ்மின் அலி கூறினார்.
நமது அடுத்த கட்ட நகர்வு குறித்து நாளை பக்காத்தான் தலைமைத்துவம் அறிவிக்கும்.
“டத்தாரான் மெர்டேக்காவில் நாளை (மார்ச் 8) இரவு 9 மணிக்கு அறிவித்தால் நீங்கள் தயாரா? அல்லது நாளை (மார்ச் 8) பிற்பகல் 3 மணிக்கு ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் அறிவித்தால் நீங்கள் தயாரா?” என்று அஸ்மின் அலி மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.