Home நாடு பயணிகளின் உறவினர்கள் கடவுச்சீட்டுகளுடன் வருமாறு கூறப்பட்டுள்ளனர்!

பயணிகளின் உறவினர்கள் கடவுச்சீட்டுகளுடன் வருமாறு கூறப்பட்டுள்ளனர்!

568
0
SHARE
Ad
MHஸ்370

மார்ச் 8 – தற்போதைய நிலவரப்படி, காணாமல் போன விமானத்தில், பயணம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்கள், உரிய கடவுச்சீட்டுகளுடன் (Passport) மாலை 6 மணிக்கு தயாராக இருக்கும் படி கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

இது குறித்து பயணி ஒருவரின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்று மாலை 6 மணிக்கு கடவுச்சீட்டுடன் தயாராக இருக்கும் படி கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.MH307 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தில் இருந்து தலா இருவர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

ஆனால் அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற விபரம் உறுதியாகத் தெரியவில்லை.